PUBLISHED ON : மார் 26, 2024 12:00 AM

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில்சேர்ந்த விளவங்கோடு தொகுதி முன்னாள் எம்.எல். ஏ., விஜயதரணி, கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது பேசுகையில், 'நான் பா.ஜ.,வில் சேர முக்கிய காரணம், அனைவரும் பாசக்காரர்களாக உள்ளனர். காங்கிரசில் பெண்களை மதிப்பதில்லை. வாரிசு அரசியல் உள்ளது. அப்பா ராஜ்யசபா என்றால் மகன் லோக்சபா. அப்பா எம்.பி.,ன்னா மகன் எம்.எல்.ஏ.,வா இருப்பார். அப்பா தேர்தலில் தோற்பார். மகன் எம்.எல்.ஏ., ஆவார். மகன் இறந்துடுவார்; அப்பா அங்கு எம்.எல்.ஏ., ஆவார். இப்படி அப்பா, மகன்னு இவங்க மட்டுமே கட்சியை ஆக்கிரமிப்பர்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'நம்ம வீட்டில் இருந்து அடுத்த வீட்டை பார்த்தால் பாசமா தான் தெரியும்... இப்ப அடுத்த வீட்டை தேடி வந்துட்டீங்க இல்ல... பாசம், வேஷமெல்லாம் இனிதான் புரியும்...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

