PUBLISHED ON : ஆக 10, 2024 12:00 AM

'இவ்வளவு திறமை இருந்தும், ஏன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குகிறார் என தெரியவில்லை...' என, காங்கிரஸ் கட்சியின், வெளிநாட்டு பிரிவுக்கான தலைவர் சாம் பிட்ராடோ குறித்து கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
இவர், பிரபலமான தொழிலதிபர். காங்கிரஸ்மீது அதிக ஈடுபாடு இருந்ததால், அதில் இணைந்தார். வெளிநாட்டு தொடர்புகள் இவருக்கு அதிகம்என்பதால், கட்சியின்வெளிநாட்டுபிரிவுக்கான தலைவராகநியமிக்கப்பட்டார்.
ராகுல், சோனியா உள்ளிட்ட காங்., தலைவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, அதற்கானஏற்பாடுகளை இவர் தான் செய்வார். ஆனால், இவருக்கு வாய் கொஞ்சம்நீளம்; அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவார். சமீபத்தில் கூட, 'நம் நாட்டின் தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் ஆப்ரிக்கர்கள் போல உள்ளனர்...' என்றார்.
இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், வெளிநாட்டு பிரிவு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்; சமீபத்தில் மீண்டும் அவருக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது.
சாம் பிட்ராடோ மிகச் சிறந்த ஓவியர். 100க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார்.சமீபத்தில், இவர் வரைந்த ஓவியங்கள், அமெரிக்காவில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட பலரும், 'இவர் எதற்கு அரசியலில் சேர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசகிறார். ஓவியங்களை வைத்தே, சர்வதேச அளவில் பிரபலமாகி விடலாமே...' என்றனர்.

