PUBLISHED ON : நவ 26, 2024 12:00 AM

'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விட்டதே...' என, வருத்தப்படுகின்றனர், சிவசேனா உத்தவ் அணி கட்சியின் நிர்வாகிகள்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேதலைமையிலான சிவசேனா,பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிநடக்கிறது. இங்கு, செல்வாக்கான கட்சியாககருதப்பட்டு வரும்சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள்உடைந்து, இரண்டு பிரிவாக மாறிய நிலையில்,முதல் முறையாக கடந்த 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது.
இந்த இரு பிரிவினரில்,யாருக்கு மக்களிடையே செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் தேர்தலாக இது இருந்ததால், தேசிய அளவிலும் பரபரப்பு நிலவியது.
ஆனால், தேர்தல் முடிவு, சிவசேனா உத்தவ் பிரிவு தலைவரான உத்தவ் தாக்கரேக்கு பெரும் அதிர்ச்சியைஅளித்தது. சிவசேனா கட்சியை நிறுவிய, மறைந்த பால் தாக்கரேயின் மகன் தான் உத்தவ் தாக்கரே.
அந்த கட்சியில் இருந்து தனி அணியாக பிரிந்து சென்று, தேர்தலை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே அபார வெற்றியை பெற்றுள்ளார்; அவரது கட்சி, 50 தொகுதிகளில் வெற்றியை ருசித்தது. ஆனால், உத்தவ் தாக்கரே தரப்பு, வெறும், 20 தொகுதிகளில்மட்டுமே வென்றது.
'ஒரு காலத்தில், மஹாராஷ்டிராவையே ஆட்டி வைத்த பால் தாக்கரேயின் மகனுக்கா இந்த நிலை? தங்கள் கட்சியின் கொள்கையில் இருந்து முற்றிலும்வேறுபட்ட காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததால், அதற்கான பயனை அனுபவிக்கிறார். எப்படியிருந்தஉத்தவ், இப்படியாகி விட்டாரே...' என கண்ணீர் வடிக்கின்றனர், சிவசேனாவின் உண்மையான விசுவாசிகள்.

