sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

 கூட்டணி பாசம்!

/

 கூட்டணி பாசம்!

 கூட்டணி பாசம்!

 கூட்டணி பாசம்!


PUBLISHED ON : மே 12, 2026 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 12, 2026 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'இது நல்ல காமெடியாக இருக்கிறதே; கவலையாக இருக்கும் நேரங்களில் இதுபோன்ற விஷயங்களை நினைத்து சிரித்து, மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்...' என, ஆந்திராவில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வை பார்த்து கிண்டல் அடிக்கின்றனர், அம்மாநில மக்கள்.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், அம்மாநில மனிதவளத் துறை அமைச்சராக உள்ளார்.

ஆந்திராவை, சர்வதேச அளவில் சிறந்த தகவல் தொழில்நுட்ப மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதில் லோகேஷ் உறுதியாக இருக்கிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாநாடு சமீபத்தில் நடந்தது. இதில், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச் சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த மாநாட்டில் பேசிய லோகேஷ், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, 'அண்ணா' என்று அழைத்தார். இவருக்கு பின் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், லோகேஷை, 'அண்ணா' என்றே அழைத்தார்.

உண்மையில், லோகேஷை விட, அஸ்வினி வைஷ்ணவ், 13 வயது மூத்தவர். அப்படியிருக்கும்போது, லோகேஷை ஏன் அண்ணா என்று அழைத்தார் என, மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர்.

'இருவரும் தே.ஜ., கூட்டணி கட்சியினர் என்பதால் அப்படி அழைத்திருக்கலாம்; ஆனாலும், இவர்களின் பாசப் போராட்டத்துக்கு ஒரு அளவு இல்லையா...' என்கின்றனர், ஆந்திர மக்கள்.






      Dinamalar
      Follow us