sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ பயம் வந்து விட்டதா?

 பயம் வந்து விட்டதா?

 பயம் வந்து விட்டதா?


PUBLISHED ON : நவ 14, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அடக்கி வாசிக்க வேண்டிய நேரம் இது என, இப்போது உணர்ந்து விட்டார் போலிருக்கிறது...' என, மஹாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரசை சேர்ந்தவருமான அஜித் பவாரைப் பற்றி பேசுகின்றனர், இங்குள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்.

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி அரசு நடக்கிறது. துணை முதல்வராக, தேசியவாத காங்., தலைவர் அஜித் பவார் பொறுப்பு வகிக்கிறார்.

சமீப காலமாகவே, அஜித் பவார் மற்றும் அவரது கட்சியினர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்நிலையில், அஜித் பவாரின் மகன் பார்த் பவாரின் நிறுவனத்திற்கு, புனேவில் உள்ள, அரசுக்கு சொந்தமான, 40 ஏக்கர் நிலம், விதிகளை மீறி விற்கப்பட்டுள்ளதாக, புதிய பூதம் கிளம்பியுள்ளது.

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிதாக்கி, போராட்டங்களை நடத்துவதால், பட்னவிஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு, நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, 'ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதால், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக எங்கள் மீது புகார் கூறப்படுகிறது. நாங்கள் மக்களை எப்போதும் மதிக்கிறோம். முறைகேடுகளில் ஈடுபட்டால், அடுத்த தேர்தலில் மக்கள் எங்களை துாக்கி எறிந்து விடுவர் என்பது நன்றாகவே தெரியும்...' என, விளக்கம் அளித்துள்ளார், அஜித் பவார்.

எதிர்க்கட்சியினரோ, 'இப்போதாவது மக்களை நினைத்து, பயம் வந்ததே...' என, கிண்டலடிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us