sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ தேங்காய் அரசியல்!

 தேங்காய் அரசியல்!

 தேங்காய் அரசியல்!


PUBLISHED ON : நவ 19, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சாதாரண விஷயத்தை இப்படி பெரிதுபடுத்தி விட்டனரே...' என புலம்புகிறார், முன்னாள் மத்திய அமைச்சரும், கேரள மாநில பா.ஜ., தலைவருமான ராஜிவ் சந்திரசேகர்.

கேரளாவில், மா.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மோடி தலைமையிலான அரசில், மத்திய அமைச்சராக பதவி வகித்த ராஜிவ் சந்திரசேகர், திடீரென கடந்த மார்ச்சில், கேரள மாநில பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர், அமெரிக்காவில் படித்தவர்; அங்கு, பல முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியவர். கேரளா தான் பூர்வீகம் என்றாலும், மலையாளத்தில் இவருக்கு சரளமாக பேச வராது.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு, கட்சிக்காரர்களுடன் வழிபடச் சென்றார், ராஜிவ் சந்திரசேகர். அப்போது, தேங்காய் மீது கற்பூரத்தை ஏற்றி, உடைக்கும்படி கட்சியினர் கூறினர். ஆனால், தேங்காய் மீது கற்பூரத்தை எப்படி வைப்பது, தேங்காயை எப்படி உடைப்பது என, தெரியாமல் ராஜிவ் சந்திரசேகர் தடுமாறினார்.

உடன் இருந்த கட்சியினர் உதவியுடன் ஒரு வழியாக தேங்காயை உடைத்து விட்டு சென்றார். இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட எதிர்க்கட்சியினர், 'தேங்காய் உடைக்கவே தெரியாத ஒருவரை, பா.ஜ.,வின் மாநிலத் தலைவராக நியமித்துள்ளனர்...' என, கிண்டல் அடித்தனர்.

ராஜிவ் சந்திரசேகரோ, 'தேங்காய்க்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்...?' என புலம்புகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us