PUBLISHED ON : செப் 29, 2026 12:00 AM

'அரசியலில் பதவியில் இருக்கும் வரைக்கும் தான் ஆட்டம் போட முடியும்; பதவி போய் விட்டால், நடுத்தெருவுக்கு வருவதை தவிர வேறு வழியில்லை...' என, தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவை கிண்டல் அடிக்கின்றனர், அங்குள்ள மக்கள்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பதவிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் அமைதியாக இருந்த ரேவந்த் ரெட்டி, இப்போது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்.
முந்தைய ஆட்சியில் சந்திரசேகர ராவ் செய்த ஊழல்களை எல்லாம், ஒன்றன் பின் ஒன்றாக தோண்டி எடுக்கத் துவங்கியுள்ளார்; தோண்ட தோண்ட ஊழல்கள் வரிசை கட்டி வருகின்றன.
சந்திரசேகர ராவும், அவரது குடும்பத்தினரும், நில உச்சவரம்பு சட்டத்தை மீறி, 439 ஏக்கர் நிலங்களை சொந்தமாக வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டும் வேலைகள் தொடங்கியுள்ளன.
'மக்கள் தலைவர் என, தன்னைத் தானே கூறிக் கொண்டு, அரசு நிலங்களை ஆக்கிரமித்து மன்னராட்சி நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர ராவின் முகமூடியை கிழித்தெறிவோம். இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, முழு உண்மையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்...' என, தெரிவித்துள்ளார் ரேவந்த் ரெட்டி.
தெலுங்கானா மக்களோ, 'ஊழல் செய்து சேர்த்த சொத்து நிலைக்காது...' என்கின்றனர்.
