தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ மானத்தை கப்பலேற்றும் மகள்!

 மானத்தை கப்பலேற்றும் மகள்!

 மானத்தை கப்பலேற்றும் மகள்!


PUBLISHED ON : மார் 07, 2026 03:02 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 07, 2026 03:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எனக்கு வெளியில் இருந்து எதிரி தேவையில்லை; எங்கள் குடும்பத்துக்குள்ளேயே வைத்திருக்கிறேன்...' என புலம்புகிறார், தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ்.

தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறி, தன் மகள் கவிதாவை, கடந்தாண்டு கட்சியை விட்டு நீக்கினார், சந்திரசேகர ராவ். இதனால் கடுப்பான கவிதா, தன் தந்தைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில், முதல்வர் ரேவந்த் ரெட்டி, தன் அமைச்சர்கள் அனைவரையும் டில்லிக்கு அழைத்துச் சென்று ஆலோசனை நடத்தினார். இதை கிண்டல் செய்த சந்திரசேகர ராவ், 'தெலுங்கானாவின் கவுரவத்தை, முதல்வர் ரேவந்த் ரெட்டி டில்லியில் அடகு வைத்து விட்டார். தெலுங்கானா அமைச்சர்கள் எதற்கு டில்லியில் ஆலோசனை நடத்த வேண்டும்?' என, கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய ரேவந்த் ரெட்டி அமைதியாக இருந்தார். ஆனால், சந்திரசேகர ராவின் மகள் கவிதாவோ, 'என் தந்தை முதல்வராக இருந்தபோது, அமைச்சரவை கூட்டங்கள், அவரது பண்ணை வீட்டில் நடக்கும்; இப்போது டில்லியில் நடக்கிறது. பண்ணை அரசியல், இப்போது டில்லி அரசியலாகி விட்டது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை...' என்றார்.

சந்திரசேகர ராவோ, 'என் மானத்தை கப்பலேற்ற, என் மகள் ஒருத்தியே போதும்...' என, புலம்புகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us