தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/‘வாயை கொடுத்து வாங்கி கட்டணுமா?’

‘வாயை கொடுத்து வாங்கி கட்டணுமா?’

‘வாயை கொடுத்து வாங்கி கட்டணுமா?’


PUBLISHED ON : நவ 06, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘தேர்தல் நெருங்கும் நேரத்தில், எதற்காக வம்பை விலை கொடுத்து வாங்குகிறார்...?’ என, சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பற்றி கவலையுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அகிலேஷ், ‘உத்தர பிரதேச மாநி லத்திற்குள், அண்டை மாநிலமான உத்தரகண்டைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியுள்ளனர்...’ என்றார்.

அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. உத்தரகண்ட் மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான புஷ்கர்சிங் தாமி, ‘ஒட்டுமொத்த உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் அகிலேஷ் பேசியுள்ளார்.

‘கடந்த 2000வது ஆண்டில், உ.பி.,யில் இருந்து உத்தரகண்டை தனி மாநிலமாக பிரிப்பதற்காக நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் உ.பி., போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது, முதல்வராக இருந்தவர், அகிலேஷின் தந்தை முலாயம் சிங் யாதவ். உத்தரகண்ட் மக்களை அவமதிப்பது தான், அகிலேஷ் குடும்பத்தினரின் பொழுது போக்கு...’ என கடுமையாக சாடினார்.

சமாஜ்வாதி கட்சியினரோ, ‘வாயை கொடுத்து வாங்கி கட்டுவதே நம் தலைவருக்கு வேலையாகி விட்டது...’ என புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us