தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/வெற்றி பெற வாய்ப்பில்லை!

வெற்றி பெற வாய்ப்பில்லை!

வெற்றி பெற வாய்ப்பில்லை!


PUBLISHED ON : நவ 05, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘கட்சியின் பொதுச்செயலராக இருப்பவருக்கு, இது கூட தெரியாதா...’ என, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால் பற்றி, ஆதங்கப்படுகின்றனர், அந்த கட்சியின் ராஜஸ்தான் மாநில நிர்வாகிகள்.

ராஜஸ்தானில், முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என, காங்கிரஸ் நிர்வாகிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதற்கு முன்னோட்டமாக, தற்போது நடந்து வரும் பஞ்சாயத்து தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக, தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை கண்டித்து, சமீபத்தில், டில்லியில் மிகப்பெரிய பேரணியை காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர். முன்னதாக, இந்த பேரணிக்கு ஆள் திரட்டும் வகையில், ‘ராஜஸ்தானிலிருந்து ஒரு லட்சம் பேரை, டில்லி பேரணிக்கு அழைத்து வர வேண்டும்...’ என, அம்மாநில நிர்வாகிகளுக்கு, காங்., பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டார்.

‘பஞ்சாயத்து தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கிறோம். இந்த நேரத்தில், டில்லிக்கு கட்சியினரை அனுப்பினால், தேர்தல் பணி பாதிக்கப்படும். ஆளுங்கட்சியினர் எளிதாக வெற்றி பெற்று விடுவர்...’ என, நிர்வாகிகள் கூறினர். ஆனால், வேணுகோபால் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை.

ராஜஸ்தான் மாநில காங்., கட்சியினரோ, ‘இதுபோன்ற பொதுச்செயலர் இருந்தால், எந்த காலத்திலும் நாம் தேர்தலில் வெற்றி பெற முடியாது...’ என புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us