தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/‘பதவி கிடைக்குமா?’

‘பதவி கிடைக்குமா?’

‘பதவி கிடைக்குமா?’


PUBLISHED ON : நவ 04, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘இது தான் சரியான நேரம்; துாண்டில் போட்டு பார்ப்போம் என முயற்சிக்கிறார் போலும்...’ என, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., லோக்சபா எம்.பி.,யுமான அனுராக் சிங் தாக்குர் குறித்து, காங்கிரஸ் கட்சியினர் கிண்டல் அடிக்கின்றனர்.

அனுராக் சிங் தாக்குர், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், பா.ஜ., இளைஞரணி தலைவராக இருந்தபோது, சுறுசுறுப்பாக பணியாற்றி, கட்சி மேலிடத்தின் பாராட்டை பெற்றார்.

இதற்கு பரிசாக, பிரதமர் மோடி தலைமையிலான அரசில், 2019ல் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைத்தது; 2021ல், ‘கேபினட்’ அமைச்சராக பதவி உயர்வு பெற்றார்.

ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை. 2024 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றும், மத்திய அமைச்சரவையில் அனுராகிற்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், சிறிது காலம் அமைதியாக இருந்தார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அனுராக், ‘காங்கிரசார், அரசியலமைப்பை கொன்றனர்; சீக்கியர்களை கொன்றனர்; இப்போது ஜனநாயகத்தை படுகொலை செய்து, குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்...’ என, கடுமையாக தாக்கி பேசினார்.

இதை கேட்ட காங்., கட்சியினர், ‘மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் அடிபடுகிறது. இந்த நேரத்தில் எங்களை தாக்கி பேசினால், மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என அனுராக் நம்புகிறார்; அதனால் தான் இப்படி ஆவேசப்படுகிறார். எங்களை திட்டி, அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் சரி...’ என, கிண்டல் அடிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us