தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/‘ஆளை மாற்றிய பதவி ஆசை!’

‘ஆளை மாற்றிய பதவி ஆசை!’

‘ஆளை மாற்றிய பதவி ஆசை!’


PUBLISHED ON : நவ 03, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 03, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘இளைஞர்களை கவராவிட்டால் அரசியலில் நீடிக்க முடியாது என, இவருக்கும் தெரிந்து விட்டது...’ என, கர்நாடக மாநில துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பரமேஸ்வர் குறித்து கிண்டல் அடிக்கின்றனர், அம்மாநில மக்கள்.

கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதல்வரான பரமேஸ்வர், 75 வயதாகும் மூத்த அரசியல்வாதி. ‘எப்படியாவது முதல்வர் பதவியில் அமர்ந்து விட வேண்டும்...’ என்பது பரமேஸ்வரின் ஆசை. ஆனால், அரசியல் சூழ்நிலை அவருக்கு சாதகமாக இல்லை.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தான், அவருக்கு துணை முதல்வர் பதவியே கிடைத்தது; அடுத்து, முதல்வர் பதவியையும் கைப்பற்றுவதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறார்; இதற்காக, இளம் தலைமுறையினரை கவர்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

சமீபத்தில், இவரது தொகுதியான துமகூரில் நடந்த தசரா நிகழ்ச்சியில், இளைஞர்களுடன் சேர்ந்து, டப்பாங்குத்து பாட்டுக்கு தாளம் தப்பாமல் ஆட்டம் போட்டார் பரமேஸ்வர். இதை பார்த்த அவரது நண்பர்கள், ‘மிகவும் சீரியசான அரசியல்வாதியான பரமேஸ்வரா இப்படி ஆட்டம் போடுவது...’ என, ஆச்சரியப்பட்டனர்.

கர்நாடக மக்களோ, ‘பதவி ஆசை, ஒரு மனிதரின் குண நலன்களைக்கூட அடியோடு மாற்றி விடுகிறதே...’ என, கிண்டல் அடிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us