தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ அக்கப்போருக்கு முடிவு?

அக்கப்போருக்கு முடிவு?

அக்கப்போருக்கு முடிவு?


PUBLISHED ON : ஜன 21, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது...' என, கவலையுடன் கூறுகின்றனர், கர்நாடக மாநில காங்கிரஸ் தொண்டர்கள்.

இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கட்சியின் மாநில தலைவரான சிவகுமார், துணை முதல்வராக உள்ளார். சிவகுமாருக்கு முதல்வர் பதவி மீது நீண்ட நாட்களாகவே ஒரு கண். இந்த பதவியை கைப்பற்றுவதற்கு, சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார்.

முதல்வர் சித்தராமையா மீதான, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய முறைகேடு விவகாரத்தை விஸ்வரூபமாக்கி, அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததே, சிவகுமாரின் உள்ளடி வேலை தான் என, சித்தராமையா தரப்பினர் கருதுகின்றனர்.

இதற்கு பதிலடியாக, 'கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவி, எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமானது அல்ல. விரைவில் அந்த பதவிக்கு புதுமுகம் ஒருவர் நியமிக்கப்படுவார்...' என, சித்தராமையா ஆதரவாளர்கள், அவ்வப்போது பிரச்னை கிளப்பி வருகின்றனர்.

சமீபத்தில், சித்தராமையா மீதான வழக்கில், அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களின், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதன் பின்னணியில், சிவகுமார் தரப்பினர் இருப்பதாக, சித்தராமையா ஆதரவாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

காங்கிரஸ் தொண்டர்களோ, 'சித்தராமையாவுக்கும், சிவகுமாருக்கும் இடையிலான அக்கப்போர் எப்போது தான் முடிவுக்கு வருமோ...' என, புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us