PUBLISHED ON : டிச 19, 2024 12:00 AM

'நேரு குடும்பத்தின் வாரிசு பிரதமராகும் நடைமுறை, ராஜிவுக்கு பின் தொடராதுபோலிருக்கிறதே...' என கவலைப்படுகின்றனர், சோனியா குடும்பத்தின் ஆதரவாளர்கள்.
நாடு சுதந்திரம் பெற்ற பின், முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். அவருக்கு பின், அவரதுமகள் இந்திரா, பிரதமராகபதவி வகித்தார். இந்திரா,சீக்கிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பின், அவரது மகன் ராஜிவ் பிரதமரானார். ராஜிவ், விடுதலை புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவருக்கு பின், அவரது மனைவி சோனியாபிரதமராக முயற்சி செய்தார்; ஆனால், அது நடக்கவில்லை. ராஜிவ் - சோனியா தம்பதியின் மகன் ராகுல், மகள் பிரியங்கா ஆகியோர், தற்போது லோக்சபா எம்.பி.,க்களாக உள்ளனர்.
இவர்களில் யாராவது ஒருவர் எதிர்காலத்தில்பிரதமராகி விடுவார் என, நேரு குடும்ப விசுவாசிகள் கனவுடன் இருந்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியால்,நாடு முழுதும் தனியாக வெற்றி பெற முடியாத சூழல் நிலவுகிறது.
இதற்காகவே, பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, 'இண்டியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்தன. இந்த கூட்டணிக்குள் தற்போது புகைச்சல் எழுந்துள்ளது.
ராகுலின் தலைமையை ஏற்க, கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே, சரத் பவார், மம்தா பானர்ஜி ஆகியோர் மறுத்து வருகின்றனர். இதனால், 'நேரு குடும்பத்தின் அரசியல் ஆதிக்கம் முடிவடைந்துவிட்டதா...' என புலம்புகின்றனர், அந்த குடும்பத்தின் விசுவாசிகள்.

