sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ வதந்தி பரப்பும் எதிரிகள்!

 வதந்தி பரப்பும் எதிரிகள்!

 வதந்தி பரப்பும் எதிரிகள்!


PUBLISHED ON : ஜன 21, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2026 04:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அரசியலை விட்டே வலுக்கட்டாயமாக விரட்டி அடித்து விடுவர் போலிருக்கிறதே...' என கவலைப்படுகிறார், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார்.

நாட்டில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான நிதிஷ் குமாருக்கு, 74 வயதாகிறது. அரசியலில் இன்னும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும், 'நிதிஷ் குமார் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும்...' என, அவரது அரசியல் எதிரிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

கடந்தாண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றதிலிருந்து, அவர் மீதான விமர்சனங்கள் குறைந்திருந்தன.

கடந்த சில நாட்களாக மீண்டும் விமர்சனங்கள் எழத் துவங்கியுள்ளன. 'நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா, நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட உள்ளது. வரும், 2027ல் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், நிதிஷ் குமார் தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட உள்ளார்...' என, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன.

நிதிஷ் குமார் ஆதரவாளர்களோ, 'தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவர். பாரத ரத்னா விருதும் அப்படித் தான். ஆனால், எங்கள் தலைவர் இன்னும் அரசியலில் தீவிரமாக இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார். அவரது அரசியல் எதிரிகள் தான், இது போன்ற வதந்திகளை பரப்புகின்றனர்...' என, கொந்தளிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us