PUBLISHED ON : மார் 19, 2026 03:22 AM

'மறுபடியும் தலைவலி தரத் துவங்கி விட்டனர்...' எ ன, புலம்புகிறார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில், ஏப்., 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தொடர்ச்சியாக, மூன்று முறை வெற்றி பெற்று, முதல்வராக வலம் வரும் மம்தா, நான்கா வது முறையாக முதல்வர் பதவியை தக்க வைக்க முயற்சித்து வருகிறார்.
கடந்த, 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, திரிணமுல் காங்கிரசில் இருந்து வெளியேறி, பா.ஜ., வில் இணைந்த சுவேந்து அதிகாரி என்பவர், அந்த தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டார்.
அப்போது, திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், நந்திகிராம் தொகுதியில், சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வி அடைந்தார். ஆயினும் முதல்வராக பதவியேற்ற மம்தா, அதன்பின், பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், 'அடுத்த மாதம் நடக்கவுள்ள தேர்தலில், பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரி, நந்திகிராம், பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவார்' என, பா.ஜ., மேலிடம் அறிவித்துள்ளது.
மம்தாவுக்கு மீண்டும் நேரடி சவால் விடும் வகையில், அவரது கோட்டைகளாக கருதப்படும் பவானிபூர், நந்திகிராம் ஆகிய தொகுதிகளில் சுவேந்து அதிகாரி களம் இறங்குவது, மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மம்தா தரப்போ, 'இந்த முறையும் தோல்வி பயத்தில் நம்மை கதற வைத்து விடுவர் போலிருக்கிறதே...' என, புலம்புகிறது.
