தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ 'தலை காட்ட முடியலையே!'

 'தலை காட்ட முடியலையே!'

 'தலை காட்ட முடியலையே!'


PUBLISHED ON : ஜூலை 12, 2026 12:42 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2026 12:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அரசியலில் இனி இவர் தாக்குப் பிடிப்பது சிரமம் தான்; பேசாமல் அரசியலுக்கு முழுக்கு போட்டு, அமைதியாக ஒதுங்கி விடுவதே நல்லது...' என, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை கிண்டல் அடிக்கின்றனர், ஆளும் கட்சியான பா.ஜ.,வினர்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ஏப்ரலில் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்கிரசை தோற்கடித்து, பா.ஜ., ஆட்சியில் அமர்ந்தது.

தொடர்ந்து, 15 ஆண்டுகள் மேற்கு வங்க முதல்வராக இருந்த மம்தா, இப்போது தனித்து விடப்பட்டுள்ளார். அவரது கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், இ ப்போது அவரை புறக்கணித்து, தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

மாநிலத்தில் எங்கு சென்றாலும், திரிணமுல் காங்., கட்சியினர் மீது மக்கள் தாக்குதல் நடத்துகின்றனர். சமீபத்தில், மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில் பேரணி சென்ற மம்தா மீதே, அழுகிய முட்டை வீசப்பட்டது. இதனால், ஆளும் கட்சியான பா.ஜ.,வை எதிர்த்து எப்படி அரசியல் செய்வது என தெரியாமல், மம்தா கடும் மன உளைச்சலில் உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us