தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ 'வாயை திறந்தாலே குற்றமா?'

 'வாயை திறந்தாலே குற்றமா?'

 'வாயை திறந்தாலே குற்றமா?'


PUBLISHED ON : ஆக 31, 2026 12:55 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2026 12:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சாதாரண விஷயத்தை பேசினால் கூட, ரொம்ப கவனமாக பேச வேண்டும் போலிருக்கிறது...' என கவலையுடன் கூறுகிறார், கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா.

கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிடதி என்ற பகுதியை, பெங்களூரு மாநகராட்சியுடன் இணைத்து, ஒருங்கிணைந்த பெங்களூரு பெரு மாநகராட்சியாக மாற்ற, அரசு திட்ட மிட்டுள்ளது.

இதற்காக, அந்த பகுதியில் விவசாய நிலங்கள் கையகப் படுத்தப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து, முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. 'இந்த போராட்டங்களில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி கட்சியான பா.ஜ., பங்கேற்கவில்லை' என, பலரும் குற்றஞ்சாட்டினர்.

இதற்கு பதிலளித்த பா.ஜ., கர்நாடக தலைவரான விஜயேந்திரா, 'அரசு தந்த இழப்பீட்டுத் தொகையை விவசாயிகள் ஏற்றுக்கொண்டு விட்டனர்...' என்றார். இதற்கு, விவசாயிகள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

'எதிர்க்கட்சியான பா.ஜ., தலைவர், விவசாயி களுக்கு ஆதரவாக இல்லாமல், அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார்...' என, விமர்சித்தனர்.

இதனால் பீதியடைந்த விஜயேந்திரா, 'அரசு, விவசாயிகளை கட்டாயப்படுத்தி, இழப்பீடுகளை ஏற்றுக்கொள்ள செய்து விட்டது என்பதை தான், வேறு அர்த்தத்தில் கூறினேன். இதை தவறாக சித்தரித்து விட்டனர். வாயை திறந்தாலே குற்றமா...?' என, புலம்புகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us