PUBLISHED ON : நவ 23, 2024 12:00 AM

'அனுபவம் வாய்ந்த தலைவர் அல்லவா; அதனால்தான், அதிரடியில் இறங்கி விட்டார்...' என,காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றி கூறுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.
காங்கிரஸ் தலைவராக கார்கே நியமிக்கப்பட்டபோது, 'இவர், 'டம்மி' தலைவராகத்தான் இருப்பார்; சோனியாவும்,ராகுலும்தான், இவரை இயக்குவர்; இவரால், கட்சியில் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது...'என, பரவலாகப் பேசப்பட்டது.
அதை உறுதி செய்யும்வகையில்தான், கார்கே வின் செயல்பாடுகள் இருந்தன. ஆனால், சமீபகாலமாக அவரது நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் தென்படுகிறது.
பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் யாராவது காங்கிரசை விமர்சித்தால், அடுத்த சில மணி நேரங்களிலேயே கார்கேவிடம் இருந்து பதிலடி அறிக்கை வெளியாகி விடுகிறது.அதுவும், கடந்த கால நிகழ்வுகளின் முன் உதாரணத்துடன், கடுமையான வார்த்தைகளைபிரயோகித்து அறிக்கை வெளியிடுகிறார், கார்கே.
சில நேரங்களில், செய்தியாளர்கள் கூட்டத்துக்கும்ஏற்பாடு செய்து, அவரே நேரடியாக விளக்கமும் அளிக்கிறார். 'இதெல்லாம் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் வேலை. நீங்கள் எதற்கு மெனக்கெடுகிறீர்கள்...' என, சக தலைவர்கள் கூறியும், அவர் அதை பொருட்படுத்தவில்லை.
'சில ஆண்டுகள் பதவியில் இருந்தாலும்,உருப்படியாக எதையாவது செய்துவிட வேண்டும்என நினைக்கிறார் போலும். அவரது ஆசைநிறைவேறட்டுமே...' என, நமட்டு சிரிப்புடன் கூறுகின்றனர், சில காங்., தலைவர்கள்.

