sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ மக்கள் மனது வைக்கணுமே!

மக்கள் மனது வைக்கணுமே!

மக்கள் மனது வைக்கணுமே!


PUBLISHED ON : நவ 12, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எப்படியாவது தன் மகனை அரசியலில் வெற்றிகரமான தலைவராக உருவாக்க மெனக்கெடுகிறார்...'என, மத்திய அமைச்சரும், கர்நாடகாவில் செயல்படும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவருமான குமாரசாமி பற்றி கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முன்னாள்பிரதமரான, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் தேவகவுடா, தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அரசியலில் நுழைத்துள்ளார்.

இவரது இரண்டாவது மகனான குமாரசாமியின் மகன் நிகில், 2019 லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், சுயேச்சையாக போட்டியிட்ட பிரபல நடிகைசுமலதாவிடம் தோல்வி அடைந்தார்.

அதன்பின், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ராம்நகர் தொகுதியில் போட்டியிட்டார்.அங்கும், காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். மூன்றாவது முயற்சியாக தற்போது, சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில் நிகில் நிறுத்தப்பட்டுள்ளார். தன் மகனை வெற்றி பெற வைப்பதற்காக, பம்பரமாக சுற்றி வந்து பிரசாரம் செய்கிறார், குமாரசாமி.

தள்ளாத, 91 வயதில் வீட்டில் முடங்கி கிடந்த தேவகவுடாவையும் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து, தன் மகனுக்காக பிரசாரம் செய்ய வைத்தார்.

'மகனை வெற்றி பெற வைக்க வேண்டும் என குமாரசாமி நினைப்பது சரிதான்; ஆனால், மக்கள் மனது வைக்க வேண்டுமே...' என்கின்றனர், காங்கிரசார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us