
'எங்களுக்கு ஏற்பட்ட நிலை, வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது...' என, விரக்தியுடன் கூறுகின்றனர்,டில்லி மக்கள்.
இங்கு, முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிநடக்கிறது. டில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும்ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள்பயிர்க்கழிவுகளை எரிப்பதாலும், வாகனங்கள் வெளியிடும் புகையாலும், டில்லியில்காற்று மாசு மிகவும் மோசமடைந்துள்ளது.
மூத்த குடிமக்களும்,குழந்தைகளும்சுவாசப் பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். லாரிகள், டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மியும், டில்லியில் எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.,வும், பரஸ்பரம் குற்றம்சாட்டி சண்டை போடுகின்றன.
'ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் டில்லி நகரம், தன் பெருமையை இழந்து விட்டது. காற்று மாசை கட்டுப்படுத்த முதல்வர் ஆதிஷி தவறி விட்டார்...' என, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டுகின்றனர்.
முதல்வர் ஆதிஷியோ, 'மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே டில்லியில்தான் செயல்படுகிறது. காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது...?' என, பதிலடி கொடுக்கிறார்.
'காற்று மாசு பிரச்னையைகூட சகித்துக் கொள்ளலாம். ஆம் ஆத்மியும், பா.ஜ.,வும் போடும் இந்த குழாயடி சண்டையைத்தான் சகிக்க முடியவில்லை...' என புலம்புகின்றனர், டில்லி மக்கள்.