தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ கொத்தடிமை கலாசாரம்!

 கொத்தடிமை கலாசாரம்!

 கொத்தடிமை கலாசாரம்!


PUBLISHED ON : ஜூன் 21, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'என்னதான் அமைச்சராகி விட்டாலும், 'காக்கா' பிடிக்கும் வழக்கத்தை விடமாட்டார்கள் போலிருக்கிறது...' என கேரள அமைச்சர்கள் பற்றி கிண்டல் அடிக்கின்றனர், அம்மாநில மக்கள்.

கேரளாவில், முதல்வர் சதீசன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற்காக, கட்சியின் மேலிட தலைவர்களுக்கு, 'ஐஸ்' வைப்பது வழக்கம்.

மேலிட தலைவர்கள் கேரளாவுக்கு வரும்போது, அவர்களை மகிழ்விக்க, பேனர் வைப்பது, போஸ்டர் அடிப்பது, விளம்பரம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் பிறந்த நாளையொட்டி, கேரளாவின் முக்கிய அமைச்சர்கள், என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தனர்.

கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ரோஜி ஜான், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணன், சுற்றுலாத் துறை அமைச்சர் விஷ்ணுநாத் ஆகியோர், வழக்கமான போஸ்டர், விளம்பரங்களுடன், சமூக வலைதளங்களிலும் விதவிதமான பதிவுகளை போட்டு ராகுலின் கவனத்தை ஈர்க்க முயன்றனர்.

'நாட்டின் எதிர்காலமே, ஏழை பங்காளனே, எங்கள் குல தெய்வமே...' என, ராகுலை புகழும் வாசகங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.

கேரள மக்களோ, 'என்னதான் உயர் பதவியில் அமர்ந்தாலும், இவர்களுக்கு இன்னும் கொத்தடிமை மனப்பான்மை போகவில்லையே...' என புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us