sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/வெற்றி நிச்சயம்!

வெற்றி நிச்சயம்!

வெற்றி நிச்சயம்!


PUBLISHED ON : மார் 19, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சினிமாவில் ஆக் ஷன் ஹீரோவாக இருந்தாலும், நிஜத்தில் காமெடியனாக சித்தரிக்கின்றனரே...' என கவலைப்படுகிறார், பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர், 1990களில் மலையாளத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர்.

அவரது ஆக் ஷன் நடிப்பும், அனல் பறக்க பேசும் வசனங்களும் அப்போதைய ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டன. ஆனால், அவருக்கு நடனமாட தெரியாது.

சினிமாவில் மார்க்கெட் போன பின், அரசியலுக்கு வந்தார். தற்போது, கேரளாவின் திருச்சூர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். அவரதுசினிமா பிரபலம், அவர் பேசிய வசனங்கள், வெற்றிக்கு கை கொடுக்கும் என பா.ஜ., வினர் நம்புகின்றனர்.

அங்குள்ள எதிர்க்கட்சி யினரோ, சுரேஷ் கோபியின் நடன காட்சிகளை கிண்டலடித்து, சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அவர் நடனமாடுவது, உடற்பயிற்சி செய்வது போல் இருப்பதாக கிண்டல் வீடியோக்களை பதிவிடுகின்றனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத சுரேஷ் கோபி, 'ஆக் ஷன் ஹீரோவாக மலையாள மக்கள் மத்தியில் பிரபலமானவன் நான். அரசியலுக்கு வந்ததற்காக என்னை கிண்டலடித்து, வீடியோக்களை பதிவிடுவது எந்த வகையில் நியாயம்...' என, கொதிக்கிறார்.

அவரது ஆதரவாளர்களோ, 'அட விடுங்க தலைவரே... இதுவும் நமக்கு ஒரு இலவச விளம்பரம் தான். கேரள இளைஞர்கள் மத்தியில் நீங்கள் தான் இப்போது அதிகம் பேசப்படும் நபர். வெற்றி நிச்சயம்...' என, ஆறுதல் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us