sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ மிகச் சிறந்த நடிகை!

 மிகச் சிறந்த நடிகை!

 மிகச் சிறந்த நடிகை!


PUBLISHED ON : பிப் 28, 2026 03:27 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 28, 2026 03:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பதை கண்டுபிடிக்க, ஒரு விசாரணை கமிஷன் தான் அமைக்க வேண்டும் போலிருக்கிறது...' என, கேரள அரசியல்வாதிகளை பற்றி கிண்டல் அடிக்கின்றனர், அந்த மாநில மக்கள்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 'அரசு மருத்துவ ம னைகளில் போதிய வசதிகள் இல்லை' என கூறி, சுகாதாரத்துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான வீணா ஜார்ஜுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியினர் சமீ பகாலமாக போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், கண்ணுாருக்கு வந்த வீணா ஜார்ஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர், அவரை முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், அமைச்சருக்கு சிறிய காயம் ஏற்பட்டது; உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதை கேள்விப்பட்ட முதல்வர் பினராயி விஜயன், மருத்துவமனைக்கே வந்து, வீணா ஜார்ஜிடம் நலம் விசாரித்ததுடன், 'காங்கிரஸ் கட்சியினர் ரவுடி அரசியல் செய்கின்றனர்...' என கண்டனமும் தெரிவித்தார்.

காங்கிரஸ் நிர்வாகிகளோ, 'வீணா ஜார்ஜை நாங்கள் தாக்கவும் இல்லை; அவர் காயமடையவும் இல்லை. உலகின் மிகச் சிறந்த நடிகை என்ற பட்டத்தை அவருக்கு வழங்கலாம்...' என கோபத்துடன் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us