தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/‘வெற்றிக்கு பிரச்னை இல்லை!’

‘வெற்றிக்கு பிரச்னை இல்லை!’

‘வெற்றிக்கு பிரச்னை இல்லை!’


PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘இவர் என்ன செய்தாலும் அது, அவருக்கு எதிராகவே திரும்பி விடுகிறதே; அவர் வாங்கி வந்த வரம் போலிருக்கிறது...’ என, காங்கிரஸ் எம்.பி., ராகுலை நினைத்து புலம்புகின்றனர், ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்படுத்தியதாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மீது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக வலியுறுத்தி கடந்த சில நாட்களாக காங்கிரஸ் தலைவர்களும், அந்த கட்சி அங்கம் வகிக்கும், ‘இண்டி’ கூட்டணி கட்சியினரும் டில்லியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களுக்கு தலைமை வகித்த ராகுல், தடுப்புகளை தாண்டி குதித்தும், சாலையில் படுத்து உருண்டும் ஆவேசமாக நடந்து கொண்டார். வேறு வழியின்றி, அவரை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கிச் சென்று கைது செய்தனர். அவரது ‘ஸ்டன்ட்’களுக்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

‘ஒரு தேசிய கட்சியின் சார்பில் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர், இப்படியா கல்லுாரி மாணவர்களை போல் நடந்து கொள்வது; ஒரு பக்குவம் வேண்டாமா...?’ என, ‘இண்டி’ கூட்டணியில் உள்ளவர்களே வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பா.ஜ.,வினரோ, ‘காங்கிரசை ராகுல் வழி நடத்தும் வரை, நம் வெற்றிக்கு எந்த பிரச்னையும் இல்லை...’ என, உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us