PUBLISHED ON : மே 28, 2026 12:00 AM

தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்துாரில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகி பலர் தி.மு.க.,வில் சேர விரும்புகின்றனர். அதற்கான தேதியை தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் கேட்டு பெற்று, அவர்கள் கட்சியில் இணைக்கப்படுவர்.
'எனக்கு 74 வயதாகி விட்டது. இருக்கும் காலம் வரை மனதில் பட்டதை தைரியமாக பேசுவேன். தி.மு.க.,வின் வளர்ச்சிக்காக என் குரல் எப்போதும் ஒலிக்கும். கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டுமே நான் கட்டுப் படுவேன். வேறு யாருக்கும் அடிபணிய மாட்டேன்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'ஏடாகூடமா பேசுறதுல தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு கடும் போட்டியை கொடுப்பார் போலிருக்கே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.
