PUBLISHED ON : அக் 22, 2026 12:00 AM

‘வெற்றியை அடைவதற்காக, இப்போதே களத்தில் இறங்கி விட்டார்...’ என, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவை பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் உத்தர பிரதேச மாநில நிர்வாகிகள்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த முறை எப்படியாவது ஆட்சி அமைத்து விட வேண்டும் என, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முயற்சித்து வருகிறார்.
ஆனால், கூட்டணி கட்சியான காங்கிரசின் கடைசி நேர சொதப்பல், அவரை பெரிதும் கவலைப் படுத்தி உள்ளது. தொகுதி பங்கீடு போன்ற விஷயங்களில் ராகுலும், அவரது ஆதரவாளர்களும் கடுமையான போக்கை பின்பற்றுவதே இதற்கு காரணம். இது குறித்த தன் கவலையை, காங்., மேலிடத்திடம் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த முறை காங்கிரஸ் சார்பில், பிரியங்காவே தொகுதி பங்கீடு குறித்து, கூட்டணி கட்சிகளிடம் பேச முடிவு செய்துள்ளார். காங்கிரசுக்கு செல்வாக்குள்ள 150 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து, அதில், 100 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கும்படி பிரியங்கா கேட்க உள்ளதாக, காங்., தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக, சமீபத்தில் உ.பி., மாநில காங்., த லைவர்களுடன் மூன்று மணி நேரம் பேச்சு நடத்தி யுள்ளார், பிரியங்கா. இதையடுத்து, ‘பிரியங்கா சாமர்த்தியமாக பேசி, 100 தொகுதிகளை வாங்கி விடுவார்; வெற்றி எங்களுக்குத் தான்...’ என, உற்சாகத்துடன் கூறுகின்றனர், காங்கிரஸ் நிர்வாகிகள்.
