தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/‘தேவையின்றி மூக்கை நுழைப்பதா?’

‘தேவையின்றி மூக்கை நுழைப்பதா?’

‘தேவையின்றி மூக்கை நுழைப்பதா?’


PUBLISHED ON : அக் 21, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘இத்தனை நாட்களாக எங்கிருந்தார் என தெரியவில்லை...’ என, கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை குறித்து ஆவேசப்படுகின்றனர், அம்மாநில காங்கிரஸ் கட்சியினர்.

கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, 2021 – 2023 வரை முதல்வராக பதவி வகித்தவர் பசவராஜ் பொம்மை. 2024 லோக்சபா தேர்தலில் எம்.பி.,யாகி தேசிய அரசியலுக்கு சென்ற பின், மாநில அரசியலில் அதிகம் தலையிடுவது இல்லை.

இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், வாக்காளர் திருத்தப் பட்டியலில் குளறுபடி செய்ததாகக் கூறி, அவரை பதவி விலக வலியுறுத்தி, கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து, காங்கிரஸ் கட்சியினரும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் பெங்களூரு வந்திருந்த பொம்மை, ‘காங்., கட்சியைக் கலைத்துவிட்டு, அதை கரப்பான் பூச்சி கட்சியுடன் இணைத்து விடுவதே நல்லது. நம் நாட்டில் குழப்பத்தை விளைவிக்க, வெளிநாட்டு நிதியை பெறும் இந்த தீய சக்திகளுக்கு, நாம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்...’ என்றார் ஆவேசமாக.

காங்கிரஸ் கட்சியினரோ, ‘சம்பந்தமில்லாமல் இவர் எதற்கு மூக்கை நுழைக்கிறார்...’ என ஆவேசப்பட்டனர்.

பசவராஜ் பொம்மையோ, ‘தேச பக்தி இயக்கமான பா.ஜ.,வின் ரத்தம் என் உடம்பில் ஓடுகிறது. தேசத்துக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அதற்கு எதிராக குரல் கொடுப்பேன்...’ என, காங்கிரஸ் கட்சியினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us