sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/யாரும் யோசிக்காத விஷயம்!

யாரும் யோசிக்காத விஷயம்!

யாரும் யோசிக்காத விஷயம்!


PUBLISHED ON : மார் 10, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 10, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இது நல்ல ஐடியாவாக இருக்கே...' என, ராஜஸ்தான் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பஜன்லால் சர்மா பற்றி ஆச்சரியப்படுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.

கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்ற பின், யாரும் எதிர்பாராத வகையில், முதன்முறை எம்.எல்.ஏ.,வான பஜன்லால் சர்மாவை முதல்வராக அறிவித்தது, கட்சி தலைமை.

இது, கட்சியில் உள்ள மூத்த தலைவர்களிடையேஅதிருப்தியை ஏற்படுத்தியது. 'சட்டசபை அனுபவமே இல்லாத ஒருவருக்கு மிகப் பெரிய பொறுப்பை கொடுக்கின்றனர். நிர்வாகத்தில் சொதப்பினால் என்ன செய்வது...' என, அவர்கள் முணுமுணுத்தனர்.

இதையறிந்த பஜன்லால் சர்மா, ஒவ்வொரு விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து, அதற்கேற்ப முடிவுகளை எடுத்து வருகிறார்.

மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் பணித்திறனை அதிகரிப்பதற்காக புதுமையான ஒரு முயற்சியை செயல்படுத்தி வருகிறார், பஜன்லால் சர்மா.

ஆன்மிகத்தில் தேர்ச்சி பெற்ற சொற்பொழிவாளர்களை அழைத்து வந்து, அரசு ஊழியர்களிடையே அவ்வப்போது பேச வைத்து வருகிறார்.

சொற்பொழிவாளர்கள் கூறும் புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றால், தங்களின் மனதில் உள்ள நெருக்கடிகள் குறைந்து, புத்துணர்ச்சி ஏற்படுவதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், மாநிலம் முழுதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டுள்ளார், பஜன்லால் சர்மா.

'யாருமே யோசிக்காத விஷயத்தை யோசித்துள்ளார், பஜன்லால் சர்மா. இதற்கு பலன் கிடைக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...' என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us