sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ இது எந்த ஊர் நியாயம்?

இது எந்த ஊர் நியாயம்?

இது எந்த ஊர் நியாயம்?


PUBLISHED ON : அக் 30, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத் தானே செய்கிறது...' என, கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் மகனும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பரத் பொம்மை பற்றி, இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2023ல் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், ஷிகாவி தொகுதியில் பசவராஜ் பொம்மை, பா.ஜ., சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால், காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததால், பசவராஜ் பொம்மையால் மீண்டும் முதல்வராக முடியவில்லை. இதைஅடுத்து, கடந்தலோக்சபா தேர்தலில், ஹாவேரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,யானார்.

இதனால், ஷிகாவி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். நவ., 13ல் இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு, பசவராஜ் பொம்மைக்குஓரளவு செல்வாக்கு உள்ளதால், அவரது மகன் பரத் பொம்மையை வேட்பாளராக நிறுத்தியுள்ளது, பா.ஜ., மேலிடம்.

இதை, காங்., கடுமையாக விமர்சிக்கிறது. 'காங்கிரசில் வாரிசு அரசியல் இருப்பதாக பா.ஜ., தலைவர்கள் நாடு முழுதும் பிரசாரம் செய்கின்றனர்.ஆனால், ஷிகாவி தொகுதியில் போட்டியிடபசவராஜ் பொம்மை மகனுக்கு சீட் கொடுத்தது ஏன்?' என, கேள்வி எழுப்புகின்றனர்.

பரத் பொம்மையோ, 'டாக்டர் மகன் டாக்டராகலாம்.இன்ஜினியர் மகன் இன்ஜினியராகலாம். அரசியல்வாதி மகன் மட்டும் அரசியலுக்கு வரக்கூடாதா; இது எந்த ஊர் நியாயம்...' என, கொதிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us