தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/‘ஏன் இந்த ஓரவஞ்சனை?’

‘ஏன் இந்த ஓரவஞ்சனை?’

‘ஏன் இந்த ஓரவஞ்சனை?’


PUBLISHED ON : அக் 18, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘காலம் கடந்து உண்மையை உணர்ந்து என்ன பிரயோஜனம்...?’ என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பற்றி கவலையுடன் கூறுகின்றனர், அந்த கட்சியின் இளம் நிர்வாகிகள்.

சமீபத்தில், காங்கிரசில் உள்ள இளம் நிர்வாகிகளுடன், ராகுல் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேசிய ராகுல், ‘நம் கட்சியில் ஏராளமானோர் பதவி, அதிகார சுகத்தை அனுபவித்து விட்டு, வேறு கட்சிக்கு ஓடி விட்டனர்.

‘தங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் போதும் போதும் என்ற அளவுக்கு அனுபவித்த அவர்கள், கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, முதுகில் குத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர்...’ என, விரக்தியுடன் பேசினார். இதற்கு உதாரணமாக குலாம்நபி ஆசாத், ஜோதிராதித்ய சிந்தியா போன்றவர்களை குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட காங்., தேசிய தலைவர் கார்கே, ‘நீங்கள் குறிப்பிட்ட நபர்கள் எல்லாம், உங்களுக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள் தானே...’ என்றார். இதை கேட்டதும், ராகுலுக்கு தர்மசங்கடமாகி விட்டது.

கூட்டம் முடிந்ததும் சில நிர்வாகிகள், ‘கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்கள், ராகுலின் கண்களுக்கு தெரிவது இல்லை. வீண் தம்பட்டம் அடிக்கும் வாய்ச்சொல் வீரர்களுக்கு பதவிகளை வாரி வழங்கினால், அவர்கள் முதுகில் குத்தாமல் என்ன செய்வர்? இனிமேலாவது இந்த ஓரவஞ்சனையை ராகுல் நிறுத்தினால் சரி...’ என, புலம்பியபடி நடையை கட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us