PUBLISHED ON : ஜூலை 26, 2025 12:00 AM

'இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராகி விட்டார் போலிருக்கிறதே...' என, சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பற்றி ஆச்சரியப்படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வரும், 2027ல் இங்கு சட் ட சபை தேர்தல் நடக்கஉள்ளது. தொடர்ச்சியாக இரண்டு முறை தோல்வியை சந்தித்ததால், சமாஜ்வாதி தொண்டர்களும், நிர் வாகிகளும் விரக்தியி ல் உள்ளனர்.
அடுத்த தேர்தலிலும் தோல்வி அடைந்தால், கட்சியில் மிச்சம் மீதி இருக்கும் தொண்டர்களும் வேறு கட்சிகளுக்கு ஓடிவிடுவரோ என்ற பயம், அகிலேஷ் யாதவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தொண்டர்களை எளிதில் சந்திக்கும் வகையில், அசம்கார் மாவட்டத்தில் புதிய அலுவலகம் ஒன்றை சமீபத்தில் திறந்து வைத்தார். 'இது, அலுவலகம் மட்டுமல்ல; என் வீடும் கூட. மாநிலத்தின் கடைக்கோடி பகுதியில் இருக்கும் மக்களும், கட்சி நிர்வாகிகளும் எளிதில் என்னை அணுகும் வகையில் இந்த அலுவலகத்தை திறந்துள்ளேன்.
'தலைநகர் லக்னோவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு எல்லாராலும் எளிதில் வர முடியாது; அதற்கு தான் இந்த மாற்று ஏற்பாடு. மாதத்தில் ஒருசில நாட்களாவது இந்த அலுவலகத்துக்கு வருவேன்...' என்றார், அகிலேஷ் யாதவ்.
பா.ஜ.,வினரோ, 'மாவட்டம் மாவட்டமாக அலுவலகம் திறந்து என்ன பயன்... ஓட்டுகள் விழ வேண்டுமே...' என, கிண்டல் அடிக்கின்றனர்.