PUBLISHED ON : ஜன 01, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒளிரும் சிறகுகள்
வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் பல வண்ணங்களில் ஒளிர்கின்றன. இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இந்த சிறகுகளின் மேல் நுண்ணிய செதில்கள் உள்ளன. அதன் நுனியில் நுண்துகள்கள் உருவாகின்றன. இவை ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிக்கும் உடற்கூறு செல்களின்படி மாறுபடும். உடற்கூறு செல்கள்தான் வண்ணத்துப்பூச்சி நிறத்துக்குக் காரணம். இந்த வண்ணத்துகள் கைகளில் ஒட்டும் அளவு மிக மென்மையானவை. வண்ணத்துப்பூச்சியின் நிறம் நம் கைகளில் ஒட்டிக்கொண்டால், அந்த இறகுப்பகுதி நிறமற்று வெளிர் நிறமாகக் காட்சியளிக்கும்.

