PUBLISHED ON : செப் 17, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காற்று வீசுவது எப்படி
மரம் ஆடுவதால் காற்று வீசுகிறதா, காற்று வீசுவதால் மரம் ஆடுகிறதா என கேட்டால் காற்று வீசுவதால் தான் மரங்கள் ஆடுகின்றன. சூரிய வெப்பம்
நிலத்தையும் கடல் நீரையும் சூடுபடுத்தும். இது அனைத்து இடத்திலும் ஒரே அளவு இருக்காது. எனவே ஒப்பீட்டளவில் கூடுதல் சூடு அடைந்த
பகுதியிலிருந்து வெப்பமுறும் காற்று, திணிவு குறைந்து மேலே எழும்பும். இந்த குறை காற்றழுத்தப் பகுதியை நோக்கி, உலகின் பிற பகுதியிலிருந்து
காற்று செல்லும். இதுவே காற்று வீசுவது என கூறுகிறோம். எனவே அடிப்படையில் காற்று வீசுவது சூரிய ஒளியின் வினையால்தான்.

