PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுரையீரலை பலமாக்கும் பழங்கள்
பொதுவாக பழங்கள் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் உடல்நலத்துக்கு நல்லது. இந்நிலையில் பழங்கள் அதிகம் எடுத்துக்கொண்டால் நுரையீரல் செயல்பாடு அதிகரிக்க உதவும். குறிப்பாக காற்றுமாசு அதிகமுள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு இது சிறந்த பலனை தரும் என பிரிட்டனின் லீசெஸ்டர் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. 2 லட்சம் பேரிடம் அவர்களின் உணவு முறை, வசிக்கும் இடங்களில் உள்ள காற்றுமாசு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பழங்கள் அதிகம் எடுப்பதால், நுரையீரல் செயல்பாடு அதிகரிப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.