PUBLISHED ON : செப் 24, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலப்பு உலோகம்
கட்டடம், சமையல் அறை பாத்திரங்கள் உள்ளிட்ட பல இடங்களில் துருப்பிடிக்காத இரும்பு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) பயன்படுகிறது. இது தனி உலோகம் இல்லை, கலப்பு உலோகம். இரும்பையும் குரோமியத்தையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில்
கலந்தால் 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' கிடைக்கிறது. இதை பிரிட்டனின் ஹாரி பிரியர்லி 1913ல் கண்டுபிடித்தார். இவர் பீரங்கிக் குழாய்கள் துருப்பிடிப்பதை தடுப்பதற்காக, இவ்வாறு பல உலோகங்களை உருக்கிக்
கலந்து தொடர்ந்து ஆய்வு செய்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் பல வகைகள் உண்டு.