PUBLISHED ON : அக் 29, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேகமாக சமைப்பது எப்படி
சாதாரண பாத்திரத்தை விட குக்கரில் வேகமாக சமைக்க முடிகிறது. இதற்கு காரணம் நீரின் கொதிநிலை. சாதாரண பாத்திரத்தில் நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியசை எட்டியதும் நீராவியாகி விடும் என்பதால் வெப்பம் அதிகரிக்காது. ஆனால் பிரஷர் குக்கரில் உள்ள நீர் 100 டிகிரி செல்சியசை எட்டியதும் உண்டாகும் நீராவி வெளியே செல்ல வழியில்லை. அப்போது வெளியே இருக்கும் வளிமண்டல அழுத்தத்தைவிட இருமடங்கு அழுத்தம் உண்டாக்கப்படுகிறது. நீரின் கொதிநிலை 120 டிகிரி செல்சியசாக ஆகிறது. எனவே உணவும் விரைவாக வெந்து விடுகிறது.

