PUBLISHED ON : பிப் 11, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதிகரிக்கும் வாய்ப்பு
வரும் 2032 டிச. 22ல் பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் '2024 ஒய்.ஆர்.4' எனும் விண்கல் மோதுவதற்கான வாய்ப்பு 1 முதல் 1.2 சதவீதம் மட்டுமே
உள்ளது என ஏற்கனவே அமெரிக்காவின் 'நாசா' விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். தற்போது இது 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. 43க்கு ஒன்று என்ற கணக்கில் வாய்ப்பு உள்ளது என கணித்துள்ளனர். இந்த விண்கல் அகலம் 200 அடி. இது 2024 டிச.27ல்
கண்டறியப்பட்டது. 4.34 கோடி கி.மீ., துாரத்தில் இருந்தது. ஆனால் சில நாட்களிலேயே, நாசாவின் 'பூமிக்கு அருகே வரும் வாய்ப்புள்ள விண்கல்' பட்டியலில் சேர்க்கப்பட்டது.

