PUBLISHED ON : ஏப் 30, 2024 12:00 AM

சிந்தனையை துாண்டும் நடைபயிற்சி
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் நடைபயிற்சியின் போது அலுவலகம் தொடர்பான மீட்டிங் நடத்துவார் என தெரிவிக்கின்றனர். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-ம் அதுபோலத்தான். இந்நிலையில் உடற் பயிற்சியே செய்யாமல் இருப்பதை விட, குறைந்தபட்சம் தினமும் 20 நிமிடம் நடப்பது மூளை செயல்திறனுக்கு உதவுகிறது என அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இது பிரச்னைகளுக்கு தீர்வு, சிந்தனை, படைப்பாற்றல், திட்டமிடுதல், மன அழுத்த மேலாண்மை, முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை அதிகரிக்க உதவுகிறது.
தகவல் சுரங்கம்
சர்வதேச 'ஜாஸ்' தினம்
பொதுவாக இசை என்பது மனதை மகிழ்விப்பதுடன், உலக மக்களை ஒருங்கிணைக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. உலகளவில் பல்வேறு இசை வகைகள் உள்ளன. 'ஜாஸ்' என்பது அமெரிக்காவின் பாரம்பரிய இசையாக கருதப்படுகிறது. 'ஜாஸ்' இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக ஐ.நா.,வின் யுனெஸ்கோ
சார்பில் சர்வதேச 'ஜாஸ்' தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'ஜாஸ்' தினம் என்பது இசையை கொண்டாடுவது மட்டுமல்ல. உலகளவில் கல்வி, பல்வேறு
கலாசாரத்தை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது.

