PUBLISHED ON : மே 21, 2024 12:00 AM

பறக்காத பறவை
நியூசிலாந்தின் சின்னமாக விளங்குவது 'கிவி' பறவை. இதில் ஐந்து வகைகள் உள்ளன. இதன் இறக்கை மிக சிறியது. இதனால் பறக்கவும் இயலாது. அதே போல உடல் அளவுடன் ஒப்பிடும் போது, பெரிய முட்டை இடும் பறவையும் இதுதான். இதன் முட்டை, அதன் உடல் அளவில் 20 சதவீதம். இதன் இறகுகள் மற்ற பறவையிடம் இருந்து வேறுபட்டது. இது தலைமுடி போல மென்மையாக இருக்கும். ஆயுட்காலம் 25 - 50ஆண்டுகள். கோழி அடைகாக்கும் காலம் 21 நாள். ஆனால் இதன் அடைகாக்கும் காலம் 80 நாள். இவை அழியும் பறவைகள் இன பட்டியலில் உள்ளன.
தகவல் சுரங்கம்
தேயிலை தினம்
உலகில் பெரும்பாலானோர் அருந்தும் பானமாக தேநீர் எனும் 'டீ' உள்ளது. தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீர் உடலுக்கு நல்லது என ஆய்வுகள் தெரிவித்துஉள்ளன. உலகில் தேயிலையின் உற்பத்தியை அதிகரிக்கவலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 21ல் சர்வதேச தேயிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியில் சீனா, இந்தியா முதலிரண்டு இடங்களில் உள்ளது. * முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21, ஆண்டுதோறும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

