PUBLISHED ON : ஜூன் 01, 2024 12:00 AM

இளஞ்சிவப்பு கடற்கரை
பொழுதுபோக்கிற்கு சிறந்த இடங்களில் கடற்கரை முக்கியமானது. உலகில் பல்வேறு கடற்கரைகள் தனிச் சிறப்புகளை கொண்டுள்ளது. அவ்வகையில் பஹாமஸ் நாட்டின் ஹார்பர் தீவில் உள்ள கடற்கரை
மணல் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அங்கு வாழும் 'போரோமினிபெரா' என்ற நுண்ணிய உயிரினங்கள் தான், கடற்கரை மணல் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு காரணம். இத்தீவில் 1700 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள ஒரே நகரம் டுன்மோர். அமெரிக்கர்கள் அதிகமாக சுற்றுலா செல்லும் இடங்களில் இதுவும் ஒன்று.
தகவல் சுரங்கம்
உலக பால் தினம்
இந்தியாவில் பால், பால் பொருட்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் குஜராத்தின் வர்கீஸ் குரியன். பாலில் உள்ள 'வைட்டமின் ஏ' உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 1ல் உலக பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* குழந்தைகளின் எதிர்காலத்துக்காக ஒவ்வொரு பெற்றோரும் உழைக்கின்றனர். அவர்களை வயதான காலத்தில் புறக்கணிக்காமல் அரவணைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 1ல் உலக பெற்றோர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

