PUBLISHED ON : அக் 06, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டைனோசர் அழிவுக்கு காரணம்
பூமியில் வாழ்ந்த பெரிய உயிரினம் டைனோசர். இவை 6.5 கோடி - 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்கல் விழுந்ததால் முற்றிலும் அழிந்தது. இந்த இனங்கள் அழிந்தாலும், அவை தொடர்பான ஆய்வுகள் தொடர்கின்றன. இந்நிலையில் அப்போது ஒரு விண்கல் மட்டுமல்ல, அதே ஆண்டில் அதை விட சிறிய மற்றொரு விண்கல்லும் பூமியை தாக்கியது என பிரிட்டனின் ஹெரியாட் வாட் பல்கலை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த விண்கல் நீளம் 1350 அடி. மணிக்கு 72 ஆயிரம் கி.மீ., வேகத்தில் பூமியை தாக்கியது என தெரிவித்துள்ளனர்.