PUBLISHED ON : நவ 01, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய கோள்
சூரிய குடும்பத்தை தவிர, வேறு கோள்கள் உள்ளனவா என விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இதற்கு முன் பல கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றளவில் பூமியை விட ஐந்து மடங்கு பெரிய கோளை இந்தியாவின் இயற்பியல் ஆராய்ச்சி
ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பெயர் 'டி.ஓ.ஐ - 6651பி'. இது பூமியின் நிறையில் 60 மடங்கு பெரியது. சூரியனை போன்ற நட்சத்திரமாக
உள்ளது. ஆனால் வெப்பநிலையில் சூரியனை விட அதிகம். இதில் 87 சதவீதம் பாறை, இரும்புசத்து நிறைந்து
உள்ளது. இது தவிர ஹைட்ரஜன், ஹீலியமும் உள்ளது.

