PUBLISHED ON : டிச 17, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலவில் எரிமலை
சூரிய குடும்பத்தில் பெரிய கோள் வியாழன். இதற்கு 95 நிலவுகள் உள்ளன. இதில் ஒன்றான 'லுா' நிலவில் தோராயமாக 400 எரிமலைகள் தொடர்ந்து வெடிக்கின்றன என ஆய்வு தெரிவித்துள்ளது. சூரிய குடும்பத்தில் கோள்கள், நிலவுகளில் இதுதான் அதிக எரிமலைப்பகுதியாக இருக்கிறது என கண்டறிந்துள்ளனர். 1610ல் விஞ்ஞானி கலீலியோ கலிலி இந்நிலவை கண்டுபிடித்தார். 1979 நாசாவின் 'வாயேஜர்' விண்கலம் முதன்முதலாக இந்நிலவில் எரிமலை இருப்பதை படம் பிடித்து அனுப்பியது. 2023, 2024ல் நாசாவின் ஜூனோ விண்கலம் இந்நிலவை அருகில் சென்று படம் பிடித்தது.