PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனிமையே தள்ளிப்போ....
தனிமையில் இருப்பது இதய பாதிப்பு, பக்கவாதம், தொற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் உருவாக காரணமாகிறது என பிரிட்டன் ஆய்வு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் 40 - 69 வயதுக்குட்பட்ட 42 ஆயிரம் பேரின் ரத்த மாதிரியை எடுத்து புரோட்டின் அளவை சோதனை செய்ததில் இதை கண்டறிந்தனர். தனிமை நேரத்தை தவிர்த்து விட்டு நண்பர்கள், குடும்பம், உறவு களுடன் அதிக நேரம் இருப்பது, கலந்துரையாடுவது, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மேற்கண்ட உடல்நல பாதிப்புகளை தடுக்க உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

