PUBLISHED ON : மார் 05, 2024 12:00 AM
கடல்நீர் உப்பாக இருப்பது ஏன்
பூமியில் உள்ள தண்ணீரின் பெரும்பகுதி கடலில் உப்பு நீராகத்தான் இருக்கிறது. பாறைகள், மணலை கரைத்துக் கொண்டு மழைநீர் ஆறுகளில் சேர்கிறது. இப்படி வரும்போது பாறை, மணலில் உள்ள தாது,
உப்புகளை எடுத்துக்கொண்டு சென்று கடலில் சேர்க்கிறது. கடலில் சேரும் நீர் வெப்பத்தால்
ஆவியாகிறது. தண்ணீரில் உள்ள உப்பு மட்டும் கடலிலேயே தங்கிவிடுகிறது. ஆவி, மேகமாகக் குளிர்ந்து மீண்டும் மழையாகப் பொழிகிறது. அந்த நீர் தாதுக்கள்,
உப்புகளை எடுத்துக்கொண்டு ஆறு மூலம் கடலில் சேர்க்கிறது. இப்படித்தான் கடல் நீர், உப்பு நீராக இருக்கிறது.
தகவல் சுரங்கம்
கிராம்பின் மகத்துவம்
கிராம்புக்கு நல்ல நறுமணம் உண்டு. காரத்தன்மை கொண்டது. இதன் மொட்டுகள் முதலில் மங்கலான வெண்மை நிறத்தில் இருந்து பச்சை நிறத்தில் மாறும். பின் சிவப்பு நிறத்தில் மாறும்போது அறுவடைக்குத் தயாராகும். துவக்கத்தில் ஸ்பைஸ் தீவுகள் என
அழைக்கப்படும்இந்தோனேஷியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய கிழக்கு, ஐரோப்பியர்கள் இதை கண்டுபிடித்தனர். தற்போது இந்தோனேஷியா, மடகாஸ்கர், இந்தியா, பாகிஸ்தான், இலங்கையில்
உற்பத்தி செய்யப்படுகிறது. சமையலுக்கு மட்டுமல்லாமல் மருத்துவ குணமும் உடையது.

