PUBLISHED ON : ஜூலை 30, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடல்நலத்தை காக்கும் நடைபயிற்சி
உடல்நலத்துக்கு தினசரி உணவு எப்படி முக்கியமோ, அதுபோல உடற்பயிற்சியும் அவசியம். தினமும் குறைந்தது 45 நிமிடம் நடக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தினமும் 7 ஆயிரம் அடி நடப்பது, முன்கூட்டி இறப்பை 47 சதவீதம் தடுக்கிறது என 'தி லான்செட்' ஆய்வு தெரிவித்துள்ளது. 1.60 லட்சம் பேரிடம் நடத்திய 57 ஆய்வுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், தினசரி 5000 - 7000 அடி நடப்பவர்களுக்கு மன அழுத்தம், இதய பாதிப்பு, டைப் - 2 நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கிறது என தெரிவித்துள்ளனர்.