PUBLISHED ON : அக் 03, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலவில் கிராமங்கள்
அடுத்த பத்தாண்டுக்குள் (2035) நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு கிராமங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. நிலவில் அமைய உள்ள இந்த தங்குமிடங்கள் அணுசக்தியால் இயங்கும். இவை நிரந்தர தங்கும் திறனுடையதாக இருக்கும்.
நிலவின் தரைப்பரப்பில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தியே கட்டுமானம் அமையும் என தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 50 ஆண்டுக்குப்பின் 2026 பிப்.,-ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் (ஆர்டிமிஸ் II விண்கலம்) செயல்படுத்தப்படுகிறது. நான்கு வீரர்கள் செல்ல உள்ளனர்.