PUBLISHED ON : அக் 28, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓடுவதற்கு ஏற்ற மண் எது
எந்த ஒரு பொருளின் மூலக்கூறுக்கு இடையேயும் 'பிணைப்பு விசை' நிகழ்கிறது. இருவேறு பொருள் சேரும்போது, அவற்றின் மூலக்கூறுக்கு இடையேயும் கவர்ச்சி விசை உண்டாகிறது. இது ஒட்டுவிசை எனப்படும். மணலும் தண்ணீரும் கலந்த ஈரமணலின் மூலக்கூறு இடையே உண்டாகும் இந்த ஒட்டுவிசையானது, உலர்ந்த மணலின் மூலக்கூறு இடையே நிலவும் பிணைப்பு விசையைவிட வலிமையானது. இதனால் ஈர மணல்பரப்பில் போதுமான கெட்டித்தன்மை ஏற்படுவதால் எளிதாக நடக்க, ஓட முடிகிறது. ஆனால் உலர்ந்த மணலில் எளிதாக நடக்க இயலாது.

