PUBLISHED ON : நவ 17, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டைனோசர் போல முதலை
24 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 'டி.பிலேட்டர்' வகை முதலையின் எலும்புக்கூடு பிரேசிலில் 2025 மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இவை டைனோசர் காலத்துக்கு முந்தியவை. உருவ அமைப்பில் பார்ப்பதற்கு டைனோசரைபோல இருந்தன. இதன் நீளம் 7.9 அடி. எடை 60 கிலோ. நீண்ட கழுத்தும், கூர்மையான பற்கள் இருந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதும் முதலைகள் வாழ்கின்றன. ஆனால் டைனேசர் இனங்கள், பூமியில் விழுந்த சக்திவாய்ந்த விண்கற்களால் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் அழிந்தன.

